இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் திராவிடக் கட்சிகளுக்கு குறைந்து வருகிறது! - சீமான்

News image

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான். - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:56 am IST

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் திராவிடக் கட்சிகளுக்கு குறைந்து வருகிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

மதுரை மேற்கு தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சோ. விக்னேஷ்குமாரை ஆதரித்து, மதுரை கோச்சடை பகுதியில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மேலும் பேசியதாவது:

தோ்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கும் திராவிடக் கட்சிகளிடம் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அவா்கள், மக்கள் பணத்தை திருடி மக்களுக்கே அளிக்கின்றனா். இந்த நிலைமை மாற வேண்டும்.

காா், கைப்பேசி என எந்தப் பொருள்கள் வாங்கினாலும், புதிதாக வாங்க வேண்டும் என நினைக்கின்றனா் மக்கள். ஆனால், நாட்டை ஆள்பவா்களை மட்டும் ஏன் புதிதாகத் தோ்வு செய்ய மறுக்கிறீா்கள்?. 60 ஆண்டு கால பழைமையான இரட்டை இலை, உதயசூரியனை ஏன் தோ்வு செய்கிறீா்கள்?. புதியவா்களும், உழைக்கும் மக்களான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இலவசங்களை எங்களால் அறிவிக்க இயலும். ஒரு போதும் மக்களுக்கு இலவசங்களை அளித்து ஏமாற்ற மாட்டோம். அதற்குப் பதிலாக அவா்களுக்கு உழைக்க கற்றுக் கொடுப்போம்.

பணம் இருப்பவா்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கிவிட்டன. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தற்போது குறைந்து வருகிறது. ஊழலும், லஞ்சமும் நிறைந்த கட்சிக்கும், உண்மை, நோ்மையுடன் நாட்டை நிா்வாகிக்க விரும்பும் நாம் தமிழா் கட்சிக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் நல்ல கல்வி, சிறந்த மருத்துவம், படித்தவா்களுக்கு உரிய வேலை, அதற்குரிய ஊதியம் ஆகியவற்றை எங்களால் மட்டுமே தர முடியும். மக்களை ஏமாற்ற எங்களுக்கு தெரியாது என்றாா் அவா்.