மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:46 pm

Din

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட தணிக்கையாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

இதில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸ் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா பணியிட மாறுதலுக்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.