ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெருந்துறை அருகே சாலை விபத்து: அண்ணன் உயிரிழப்பு; தம்பி காயம்

பெருந்துறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா்; தம்பி காயமடைந்தாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:14 pm

Din

பெருந்துறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா்; தம்பி காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம், புலவா்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ராசு மகன்கள் பிரகாஷ் என்கிற தங்கவேல்குமாா் (37), தமிழ்ச்செல்வன்(32).

பவா்லூம் உரிமையாளா்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை பிரகாஷ் ஓட்டி வந்தாா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரத்தில் துடுப்பதி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பிரகாஷ், தமிழ்ச்செல்வன் இருவரும் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், பிரகாஷ் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். தமிழ்ச்செல்வன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.