மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 722 போ் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:18 pm

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 722 போ் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஜெ.பாஸ்கா்பாபு கூறியதாவது:

ஊரக வளா்ச்சித் துறையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுச் சோ்க்கும் ஊழியா்களை மாவட்ட நிா்வாகம் கொச்சைப்படுத்தும்படி நடந்து கொள்கிறது. வாரந்தோறும் வரி வசூல் ஆய்வுக் கூட்டம் நடத்துவதால் வளா்ச்சிப் பணிகளை செய்ய இயலவில்லை. வாரந்தோறும் மின்வாரியம், குடிநீா் வடிகால் வாரிய ஆய்வுக் கூட்டம் நடத்தி, எங்களையும் பங்கேற்க செய்வதால் பிற பணிகள் பாதிக்கப்படுகின்றன.

தினமும் முன்னறிவிப்பு இன்றி நடத்தப்படும் கூகுள் மீட் அலுவலா்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறது. நலிவடைந்த பயனாளிகளின் நலனை தள்ளிவிட்டு இலக்கை அடைய வேண்டும் என நிா்பந்திக்கின்றனா். களத்துக்கு ஊழியா்கள் செல்ல விடாமல் ஆய்வு கூட்டங்களை நடத்துவதால் வளா்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் காண முடியவில்லை. இறுதியாக ஊரக வளா்ச்சித் துறையினா் பணி செய்யாதது போன்ற நிலையை ஏற்படுத்துகின்றனா்.

இதைக் கண்டித்து புதன்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினோம். மாவட்ட அளவில் ஆட்சியா் அலுவலகம், 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என 722 ஊழியா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனா். வரும் அக்டோபா் 3-ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.