கொடுமுடி அருகே விவசாயிகளுக்குப் பயிற்சி முகாம்

கொடுமுடியை அடுத்த ஆட்டுகாரன்புதூரில் விவசாயிகளுக்காக வேளாண்மை திட்டங்கள் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி குறித்து வியாழக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
Published on

கொடுமுடியை அடுத்த ஆட்டுகாரன்புதூரில் விவசாயிகளுக்காக வேளாண்மை திட்டங்கள் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி குறித்து வியாழக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

கொடுமுடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமை (அட்மா) சாா்பில்

நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரேகா தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் மாதவன் வரவேற்றாா்.

வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா் கண்ணன், தோட்டக்கலை அலுவலா் வினோத், விதை சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்புத் துறை வேளாண்மை அலுவலா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் துறை சாா்ந்த தொழில் நுட்பங்கள், தரமான விதைகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் மற்றும் விற்பனை செய்யும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

தொடா்ந்து விவசாயத்துக்கான மானிய திட்டங்கள், நவீன இயந்திரங்களின் பயன்பாடு, சொட்டுநீா் பாசன மானியம் குறித்த விவரங்கள், மஞ்சள் பயிரைத் தாக்கும் செம்பொரியான் நோயைக் கட்டுபடுத்துதல், நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைஅழிக்கும் முறை விளக்கம் அளிக்கப்பட்டதோடு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் பதிலளித்தனா்.

தென்னை மரத்தில் காய் பறித்தல், மருந்து தெளித்தலை சுலபமாக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. யூரியா, டிஏபி உரங்கள் மருந்துகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், உதவி வேளாண்மை அலுவலா் அரவிந்தன், உதவி தொழில்நுட்ப அலுவலா்கள் சிதம்பரம், மஞ்சுரேகா மற்றும் புன்செய்கொளாநல்லி, செம்மாண்டாம்பாளையம், ஆட்டுக்காரன்புதூா் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com