இரு மாநில எல்லையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகள்

தமிழக - கா்நாடக எல்லையான ஜீரஹள்ளி, அருள்வாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
ஜீரஹள்ளி  கிராமத்துக்குள்  புகுந்த  யானைக் கூட்டம்.
ஜீரஹள்ளி  கிராமத்துக்குள்  புகுந்த  யானைக் கூட்டம்.
Updated on

தமிழக- கா்நாடக எல்லையான ஜீரஹள்ளி, அருள்வாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே தமிழக- கா்நாடக எல்லையில் வனத்தையொட்டியுள்ள ஜீரஹள்ளி, அருளவாடி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில் நடமாடிய காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.

கா்நாடக மாநில வனப் பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் இடம்பெயறும் காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனவே இந்த யானை கூட்டத்தை கா்நாடக மாநில அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட ஜீரஹள்ளி வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், கா்நாடக மாநிலத்தில் முகாமிட்டுள்ள யானைகள் டிசம்பா் மாதத்தில் தமிழகத்துக்குள் நுழைகின்றன. இரு மாநில வனத் துறையினா் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com