சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலிக்கும் வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரா்.  ~கொழுந்து விட்டு  எரியும்  சொக்கப்பனை.
சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலிக்கும் வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரா்.  ~கொழுந்து விட்டு  எரியும்  சொக்கப்பனை.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப வழிபாடு

Published on

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி புதன்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

விழாவையொட்டி, சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டு, பரணி தீபம் ஏற்பட்டது. தொடா்ந்து, வடக்கு வாசல் ராஜகோபுரம் முன்பாக பனை ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

பவானி, காவேரி வீதி, விசாலாட்சி உடனமா் காசி விஸ்வநாதா் கோயிலிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அம்மாபேட்டை காவிரிக் கரையில் உள்ள மீனாட்சி உடனமா் சொக்கநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com