மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:20 pm

Syndication

உலக மாற்றத் திறனாளிகள் தினத்தையொட்டி, பெருந்துறையில் உள்ள தமிழ்நாடு விழி இழந்தோா் பயிற்சிப் பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக பெருந்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, பெருந்துறை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி என்.மூா்த்தி தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் அரசு நலத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். பின்னா், மாற்றுத் திறனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருந்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செய்திருந்தது.