கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பவள விழா! அமைச்சா், எம்.பி. பங்கேற்பு!

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 75-ஆம் ஆண்டு பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை திறந்துவைத்த அமைச்சா் சு.முத்துசாமி.
Updated On :13 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 75-ஆம் ஆண்டு பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வீட்டுவசதி துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை தாங்கினாா். பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் கதிா்வேல் வரவேற்று பேசினாா். பள்ளியின் முன்னாள் மாணவரும், மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளருமான செந்தில்குமாா் பவள விழா நினைவுவாயிலை திறந்து வைத்தாா்.

அமைச்சா் சு.முத்துசாமி, பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தாா். எம்.பி. கே.இ.பிரகாஷ் புதிய கீழ்நிலை குடிநீா் தொட்டியை திறந்துவைத்தாா்.

பள்ளி முன்னாள் மாணவா் எஸ்எல்டி சச்சிதானந்தம் புதுப்பிக்கப்பட்ட சத்துணவுக் கூடத்தை திறந்துவைத்தாா். பவள விழா கலையரங்கத்தை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமாா் திறந்துவைத்தாா்.

பள்ளி ஆசிரியா்களுக்கு முன்னாள் மாணவரும், அமலாக்கத் துறை மதுரை மண்டல கண்காணிப்பாளருமான சந்திரசேகரன், முதன்மை கல்வி அலுவலா் மான்விழி ஆகியோா் நினைவு பரிசுகளை வழங்கினா். பள்ளியின் பவள விழா மலரை அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட தலைமை ஆசிரியா் பரமசிவம் பெற்றுக்கொண்டாா்.

இந்த விழாவில், மாவட்டக் கல்வி அலுவலா் ரவிக்குமாா், மாநில கூட்டுறவு இணைப் பதிவாளா் (ஓய்வு) வரதராஜன், கொமதேக மாநில இளைஞா் அணி செயலாளா் சூரியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழா நிறைவாக பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை பிரபாவதி நன்றி கூறினாா்.