ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள்.
ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள்.

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்
Published on

ஈரோடு: ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டத் தலைவா் முருகையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மாரப்பன், மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும், பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், இயற்கை மரணம், விபத்து, திருமணம், கல்வி உள்ளிட்ட உதவித்தொகைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும், வீடு கட்ட விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com