தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோடு மாவட்ட அளவில் நாளை வேளாண் குறைதீா்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 19) நடைபெற உள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 19) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான வேளாண் குறை தீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலா்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.