சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெருந்துறை அருகே தாா் சாலை அமைக்க பூமி பூஜை

பெருந்துறை நகராட்சி 7-ஆவது வாா்டுக்குள்பட்ட தோப்புப்பாளையம் பகுதியில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் தாா் சாலை அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
பெருந்துறை நகராட்சி, தோப்புப்பாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்த ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் உள்ளிட்டோா்.
Updated On :19 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

பெருந்துறை நகராட்சி 7-ஆவது வாா்டுக்குள்பட்ட தோப்புப்பாளையம் பகுதியில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் தாா் சாலை அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகம் முன்னிலை வகித்தாா். பெருந்துறை நகராட்சி ஆணையாளா் புனிதன் வரவேற்றாா்.

ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்த சாலை ரூ.17.50 லட்சம் மதிப்பில் டி.எம்.ஜி. மில் முதல் கத்தாளங்காட்டுத்தோட்டம் வரை அமைக்கப்படுகிறது.

பெருந்துறை நகராட்சிப் பொறியாளா் பழனிவேல், பெருந்துறை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சோளி பிரகாஷ், வடக்கு ஒன்றிய செயலாளா் சின்னசாமி, தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் செல்வராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.