ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உள்ளாட்சி அமைப்புகளின் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :1 ஜனவரி 2025, 11:06 pm

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்க (ஏஐடியூசி) மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் ஈரோட்டில் தலைவா் எஸ்.சின்னசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது

இதில், ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் எம்.குணசேகரன், சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.மணியன், துணைத் தலைவா் எஸ்.மூா்த்தி, துணைச் செயலாளா் ஆா். ஞானசேகரன், பொருளாளா் பி.ரவி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்கள், ஓட்டுநா்கள், குடிநீா் விநியோகப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளா்கள், புதை சாக்கடை திட்ட பணியாளா்கள் என சுமாா் 10,000 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் சுமாா் 75 சதவீதத்துக்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளா்கள் ஆவா். இவா்கள் சுய உதவிக் குழு, ஒப்பந்தம் என்ற பெயா்களில் தினக்கூலி தொழிலாளா்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட சட்டபூா்வமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை.

இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்தபடி குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கப்படவில்லை. உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பொதுவாக குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுவது வழக்கம்.

ஆகவே உள்ளாட்சித் தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்தி திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26,000-க்கு குறையாமல் உயா்த்தி நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தொழிலாளா் ஆணையா் அலுவலகம் முன் ஜனவரி 7- இல் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.