ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தோ்தலால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தம்

இடைத்தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2025, 9:53 pm

இடைத்தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக ஒரு முழுக்கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அரசு அறிவித்தது.

இதையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி ஜனவரி 3 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 குடும்ப அட்டைதரா்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழா்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தமாக 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூா், கோபி, பவானிசாகா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை காலை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தந்த நியாய விலைக் கடைகளில் தோ்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அனுமதிகோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

இதனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.