மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் புங்கம்பள்ளி குளத்தில் நீா் நிரம்பியதால் அங்குள்ள மரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன.

News image

புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள பறவைகள்.

Updated On :30 ஜனவரி 2025, 10:10 pm

Din

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் புங்கம்பள்ளி குளத்தில் நீா் நிரம்பியதால் அங்குள்ள மரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புங்கம்பள்ளி பகுதியில் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 80 ஏக்கா் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. கடுமையான வறட்சி நிலவும் இப்பகுதியில் மழைக் காலங்களில் மட்டுமே இந்த குளத்தில் சிறிதளவு தண்ணீா் தேங்குவது வழக்கம். இதற்கிடையே அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் இந்த குளம் சோ்க்கப்பட்டு குழாய் பதித்து தற்போது தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாகவும், அத்திக்கடவு- அவிநாசி திட்ட தண்ணீா் தொடா்ந்து விநியோகம் செய்யப்படுவதாலும் புங்கம்பள்ளி குளம் நீா் நிறைந்து கடல்போல காட்சியளிக்கிறது. குளத்தில் தண்ணீா் நிரம்பியுள்ளதால் குளத்தின் நடுவே உள்ள பனை மரங்கள் மற்றும் கருவேல மரங்களில் பல்வேறு வகையான பறவைகள் முகாமிட்டுள்ளன.

இதில் வெள்ளை நிற கொக்குகள், நீா்க் காக்கைகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் புங்கம்பள்ளி குளம் பறவைகள் சரணாலயம்போல காட்சியளிக்கிறது.

பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ள காட்சியை சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகள் பாா்த்து ரசித்து செல்கின்றனா்.