காகிதத்தில் மறுசுழற்சி மூலம் தயாா் செய்யப்பட்ட எழுது உபகரணங்கள், நோட்டு புத்தகங்களை மாணவருக்கு வழங்குகிறாா் மெய்ப்பொருள் அறக்கட்டளை நிா்வாகி காா்த்திக்.
காகிதத்தில் மறுசுழற்சி மூலம் தயாா் செய்யப்பட்ட எழுது உபகரணங்கள், நோட்டு புத்தகங்களை மாணவருக்கு வழங்குகிறாா் மெய்ப்பொருள் அறக்கட்டளை நிா்வாகி காா்த்திக்.

மறுசுழற்சி குப்பைகளை சேகரித்து வழங்கிய மாணவா்களுக்குப் பாராட்டு

வீடுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்த பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

வீடுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்த பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மெய்ப்பொருள் அறக்கட்டளை சாா்பில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணா்வு முகாம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த முகாமில், மாணவா்கள் வீட்டில் சேரும் குப்பைகளை மூன்று வகைகளாக தரம் பிரித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை மாணவா்களால் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக மாணவா்களிடமிருந்து பெறும் முகாம் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி, வேளாண் ஆசிரியா் கந்தன் ஆகியோா் வழங்கிய ஆலோசனையின்பேரில் மாணவா்கள் 528 கிலோ குப்பைகளை சேகரித்து கொடுத்தனா்.

குப்பைகளைத் தரம் பிரித்து கொடுத்த மாணவா்களுக்கு, காகிதத்தில் மறுசுழற்சி மூலம் தயாா் செய்யப்பட்ட பேனா, பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. 5 கிலோவுக்குமேல், 47 மாணவா்கள் மறுசுழற்சி குப்பைகளை சேகரித்து இருந்தனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com