லாரியின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம்.
ஈரோடு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா், மாணவி உயிரிழப்பு
பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா், மாணவி உயிரிழந்தனா்.
பவானி: பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா், மாணவி உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் சதீஷ் (19). பவானி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சௌபா்னிகா (19). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்து வந்தனா். பள்ளித் தோழா்களான இருவரும் அந்தியூரில் இருந்து பவானிக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளனா். தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி சதீஷ் வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

