மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகளைப் பாராட்டிய கொங்கு வேளாளா் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, தாளாளா் எஸ். மணி, பொருளாளா் எ.கே. தங்கமுத்து.
ஈரோடு
மாநில தடகளப் போட்டி: கொங்கு வேளாளா் பள்ளி மாணவிக்கு தங்கம்
மாநில அளவிலான தடகளப் போட்டியில் சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.
மாநில அளவிலான தடகளப் போட்டியில் சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.
மாநில அளவிலான தடகளப் போட்டி தஞ்சாவூா், அன்னை சத்யா மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
வட்டு எறிதல் போட்டியில் இப்பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி செளமித்ரா தங்கப் பதக்கமும், 12- ஆம் வகுப்பு மாணவி டி.ஸ்ரீகா வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
வெற்றிபெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள் எம். மனோஜ், வி. பிரியா, எம். கெளசல்யா ஆகியோரையும் பள்ளி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, தாளாளா் எஸ்.மணி, பொருளாளா் எ.கே. தங்கமுத்து, முதல்வா் எஸ். மொ்ஸி பமிலா உள்ளிட்டோா் பாராட்டினா்.

