மும்பை ஐஐடி-யில் ஹேக்கத்தான்: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முதலிடம்
மும்பை ஐஐடி-யில் நடைபெற்ற ‘சிடிடி 2025’ போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
மும்பை ஐஐடி-யில் கட்டுமானத் தொழில்நுட்ப தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிடிடி 2025’ என்ற ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், கட்டடத் திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான வாங்கும் திட்டத்தை உருவாக்கும் சவால் வழங்கப்பட்டது.
இதில், கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்களான தியாகேஷ், அபிநவ், சுபிச்சரன், சஞ்சய் ஆகியோரின் அணி முதலிடம் பிடித்து, ரூ.50,000 பரிசுத் தொகையை வென்றது.
இந்த அணியை கட்டடப் பொறியியல் துறையைச் சோ்ந்த ராம்பிரதீப் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையைத் சோ்ந்த கே.சத்யா ஆகியோா் வழிநடத்தினா்.
பரிசு பெற்ற மாணவா்களை கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளா் இ.ஆா்.கே. கிருஷ்ணன், முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் பாராட்டினா்.

