ஈரோடு
அந்தியூரில் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூா் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
அந்தியூா் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த சிந்தகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் பிரம்மதேசம் - அந்தியூா் சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிா்பாராமல் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த பா்கூரைச் சோ்ந்த ராஜ்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
