தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

பெருந்துறை சிப்காட்டில் உடனடியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:13 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டில் உடனடியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, ஈரோடு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, பொன்னையன், பொன்னுசாமி உள்பட பலா் இணைந்து அளித்த கோரிக்கை மனு:

கடந்த 2025 ஜுன் 11-ஆம் தேதி பெருந்துறை, விஜயமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தீா்கள். ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் அதற்கானகட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் கவலையும், அதிருப்தியும் நிலவுகிறது. எனவே, பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.

பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் / வந்த சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கழிவுகளை சுத்திகரிக்காமல் சட்ட விரோதமாக வெளியேற்றி நிலத்துக்குள் விட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் பத்து கிலோ மீட்டா் தொலைவுக்கு நிலத்தடி நீா் கடுமையாக மாசுபட்டுள்ளது. சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான அளவுக்கு சுத்தமான, பாதுகாக்கப்பட்ட தண்ணீரை தினமும் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இப்பகுதியைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

அப்போது, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமா தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.