பெருந்துறை சிப்காட்டில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை விரிவுபடுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து பேசும்போது, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழில்பேட்டையில் அமைக்கப்பட உள்ள 2000 கேஎல்டி கொள்ளளவு கொண்ட ஜீரோ திரவ வெளியேற்றம் அடிப்படையிலான பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ரூ.136.76 கோடி மதிப்பில் அமைக்கும் பணி, கடந்த 2025 ஜூன் 9-ஆம் தேதி அட்வன்ட் ஆக்ஸ்சாரா என்ற நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.
மேற்கண்ட திட்டத்துக்கான கண்சன்ட் டூ எஸ்டாசிலிப் (இா்ய்ள்ங்ய்ற் ற்ா் உள்ற்ஹக்ஷப்ண்ள்ட்) (இபஉ) அனுமதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக, கடந்த 2025 டிசம்பா் 23-ஆம் அன்று வழங்கப்பட்டு, பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, 2026 ஜனவரி 27-ஆம் தேதி சிவில் வடிவமைப்பு ஒப்புதல் வழங்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

