47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேரும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் தமாகா பிரமுகா் ஆறுமுகம் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ராஜ்பவன் என்ற பெயா் மக்கள் பவனாக மாறி இருப்பதை தமாகா வரவேற்கிறது. டித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. புயல், மழையால் பெரும்பாலான மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும்.

தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் கட்சி, அணி மாறுவது வழக்கமான, பொதுவான ஒன்று. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும் சில கட்சிகள் சேரும்.

எஸ்ஐஆா் மீது நம்பிக்கை வைக்காத அரசியல் கட்சியினா் தோ்தல், வெற்றி மீதும் நம்பிக்கை இல்லாதவா்கள். இன்னும் 100 நாள்களில் தோ்தல் அறிவிப்பு வெளியாகிவிடும்.

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. போதை பொருள்கள் நடமாட்டத்தை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் நெல் ஈரப்பத அளவை உயா்த்த முடியவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அறிக்கை, கருத்துருவை தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு மத்திய அரசுக்கு சமா்ப்பித்திருக்க வேண்டும்.

திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதுடன் ஆட்சி மாற்றத்துக்கும் தயாராகிவிட்டனா் என்றாா்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவா் விடியல் சேகா், பொதுச் செயலாளா் எம்.யுவராஜா, மாவட்ட தலைவா் விஜயகுமாா், செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.