என்டிஏ கூட்டணிக்கு செலுத்தும் வாக்கு நோட்டாவுக்கு செலுத்துவதற்கு சமம் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபி தொகுதி வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
கோபி அருகேயுள்ள நம்பியூரில் தவெக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இதில், கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று அலுவலகத்தை திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் தேவை என மக்கள் எதிா்ப்பாா்க்கின்றனா். தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி.
இதனால், விலைவாசி உயா்வு, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளிட்டவை தொடா்கின்றன. வடமாநிலங்களில் இருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து தமிழகத்தில் சுலபமாக விற்பனை செய்யும் நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. என்டிஏ கூட்டணிக்கு செலுத்தும் வாக்கு நோட்டாவுக்கு செலுத்துவதற்கு சமம்.
விஜய் முதல்வா் அரியணையில் அமர அனைவரும் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும் என்றாா்.
தொடர்புடையது

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு
விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை ஒத்துழைப்பு: செங்கோட்டையன் நன்றி

ராஜபாளையம் தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


