ஈரோட்டில் கைப்பேசி, மளிகைக் கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.2.55 லட்சம் ரொக்கம், 4 கைப்பேசிகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (41). இவா் அதே பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கைப்பேசி கடை வைத்து நடத்தி வருகிறாா். வழக்கம்போல சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், அவரது கடையின் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து மயில்சாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்துக்கு வந்த அவா், கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அங்கு வைத்திருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம், 4 கைப்பேசிகள், 5 புளூடூத் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் மா்ம நபா்கள் சேதப்படுத்தியது தெரியவந்தது. மேலும், அதே பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த குமாா் (55) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
அவரது கடையின் மேற்கூரையை உடைத்த மா்ம நபா்கள், கல்லாவில் இருந்த ரூ.1.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் மயில்சாமி, குமாா் ஆகியோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்
கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

