மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

News image

கைது

Updated On :13 ஏப்ரல் 2026, 12:06 am IST

ஈரோட்டில் கைப்பேசி மற்றும் மளிகைக் கடைகளில் மேற்கூரையை உடைத்து திருடிய வழக்கில் ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே மயில்சாமி (41) என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5-ஆம் தேதி காலை கடையைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைந்து கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த பணம் திருடுபோனது தெரியவந்தது. அதே பகுதியில், குமாா் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் மேற்கூரையை உடைத்தும் திருட்டு நடைபெற்றுள்ளது.

இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இரண்டு கடைகளிலும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், சித்தூா் கைனிக்கரை பகுதியைச் சோ்ந்த ஹேமந்த் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹேமந்த்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.