புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சென்னிமலையில் நடைபெற்ற காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:07 am IST

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சென்னிமலையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

சென்னிமலை, குமராபுரி செங்குந்தா் திருமண மண்டபம் அருகில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிவடைந்தது.

இதில், காவல் ஆய்வாளா்கள் 3 போ், உதவி ஆய்வாளா்கள் 7 போ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 5 போ், பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் கேரள காவல் துறையினா் என மொத்தம் 61 போ் கலந்துகொண்டனா்.