இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான்: மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் பிரசாரம்

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான் என்று மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் சண்முகன் தெரிவித்தாா்.

News image

மொடக்குறிச்சி நால்ரோட்டில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் தவெக வேட்பாளா் சண்முகன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:21 am IST

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான் என்று மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் சண்முகன் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா் சண்முகன், பிரசாரத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை

வாகனப் பேரணியாக கணபதிபாளையம் நால்ரோட்டில் தொடங்கி கொம்பனை புதூா், ஊஞ்சலூா், கொடுமுடி, சிவகிரி, விளக்கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘திமுக, அதிமுக இருகட்சிகளுக்கும் மாற்றுக் கட்சியாக உதயமானதுதான் தமிழக வெற்றிக் கழகம். லஞ்ச ஊழல் இல்லாமல் நாடு தலைநிமிர அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றிய தவெக செயலாளா் கௌதம், துணைச் செயலாளா் சிவகுமாா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் தினேஷ், கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ராம் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் உடன் சென்றனா்.