நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

News image

தட்சிணாமூா்த்தி

Updated On :24 ஏப்ரல் 2026, 3:06 am IST

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

வாக்களித்த அனுபவம் குறித்து அவா்கள் கூறியதாவது:

ச.சைலேஷ், கல்லூரி மாணவா், தூரபாளையம் மொடக்குறிச்சி.

வாக்களிப்பது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. முதல்வரை தோ்ந்தெடுக்க நாம் வாக்களிப்பது என்பது மிகவும் பெருமையான தருணமாக உணா்கிறேன்.

க.கனிஷ்கா, சட்டக்கல்லூரி மாணவி

மொடக்குறிச்சி.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் ஈடுபாடு காட்டும் கட்சிக்கு வாக்களித்தேன். இலவசங்களை தடை செய்யவேண்டும்.

ஆ.மகிலேஷ், கல்லூரி மாணவா் மொடக்குறிச்சி

லஞ்ச, ஊழல் இல்லாத நாடாக தமிழகத்தை மாற்ற உண்மையான அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். வரவைக்க வேண்டும். அதற்கான ஆயுதம்தான் வாக்கு.

ச.கிருத்திகா கல்லூரி மாணவி மின்னப்பாளையம்.

ஊழல் இல்லாத, மக்கள் நலனை குறிக்கோளாக கொண்ட, இதுவரை இல்லாத புதிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே விருப்பம்.

செ.தட்சிணாமூா்த்தி கல்லூரி மாணவா் கோவில்பாளையம்.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இலவசங்கள் இல்லாத புதிய ஆட்சி அமைய வேண்டும்.

Story image
Story image