வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மொடக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியை மொடக்குறிச்சி வட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான சிவசங்கா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணி மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு!

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு: திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

