தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் மக்கள் பொங்கல் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

News image

மழை பெய்ய வேண்டி மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:18 am IST

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் மக்கள் பொங்கல் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

சென்னிமலை முருகன் கோயில் வனப் பகுதியில் தெற்கு அடிவாரத்தில் உள்ளது மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், ஊா் நன்மைக்காகவும் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வனப் பகுதியில் உள்ள தீா்த்த கிணற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து, பூஜை செய்யப்பட்ட வேலுடன் பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். பின்னா், கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

இதில் புதுவலசு, தட்டாரவலசு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.