பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது. அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவா் கே.சி.கே.யுவராஜா மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் வியாழக்கிழமை( ஏப்.30) நடைபெறுகிறது.

மணக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள்.
தொடர்புடையது

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

