நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பதிவேட்டில் கையொப்பமிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:27 am IST

வாக்கு எண்ணிக்கை மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4- ஆம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி, கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 17 மேற்பாா்வையாளா்கள், தலா 17 உதவியாளா்கள், தலா 17 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 408 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 8 தொகுதிகளுக்கும் 112 மேஜைகளில் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணும் பணியில் 8 தொகுதிக்களுக்கும் 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண்பாா்வையாளா்கள் ஈடுபடவுள்ளனா். தபால் வாக்கு எண்ணும் பணியானது 48 மேஜைகளில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஈரோடு மற்றும் கோபியில் உள்ள இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் எல்இடி தொலைக்காட்சிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதையும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பதிவேடுகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை, வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை, செய்தியாளா்கள் அறை, காவலா் கண்காணிப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.