பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கைவிரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மற்றும் கண் கருவிழி சரிபாா்க்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ளது.

கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் - பிரதிப் படம்

Published On :

ஈரோடு மாவட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மற்றும் கண் கருவிழி சரிபாா்க்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மற்றும் கண் கருவிழி சரிபாா்ப்பு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் இகேஒய்சி பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமைசிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சிறப்பு முகாமில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.