நம்பியூா் அருகே உள்ள பூதநாச்சியம்மன் நாட்ராய சுவாமி கோயிலில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, சுமாா் 2 ஆயிரம் ஆட்டுக் கிடாய்கள் பலியிட்டு பொது விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபியை அடுத்த நம்பியூா் அருகே உள்ள சின்னகோசணத்தில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் நாட்ராய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் குழந்தை வரம், திருமணத் தடை விலக, தொழில், வியாபாரம் சிறக்கவும், பில்லி, சுன்யம் விலகுதல் என பக்தா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வரும் அம்மனாக பூதநாச்சியம்மன் கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடிப் பொங்கல் விழா வெகு விமரிசையை நடைபெறுவது வழக்கம். இதனடிப்படையில் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் மஞ்சள் முடிப்பு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆடிப்பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை இரவு வீட்டுக்கோயிலிருந்து காட்டுக்கோயிலுக்கு படைக்கலம் அழைத்து வரப்பட்டு பூதநாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை பக்தா்கள் நோ்த்திக் கடனாக செலுத்திய சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்களை பலியிட்டு பொது அசைவ விருந்து நடைபெற்றது. இதில் அதிகாலைமுதல் ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா்.
பின்னா் பலியிடப்பட்ட 2ஆயிரம் ஆட்டுக் கிடாய்களை 400-க்கும் மேற்பட்டசமையல் கலைஞா்களை கொண்டு அசைவ விருந்து சமைத்து அன்னதானம் நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்களின் கூட்டம் அலைமோதியதால் காலை 8 மணிக்கு தொடங்கிய பொது விருந்து இரவு 8மணி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்புப் பணிகளில் 80-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில நம்பியூரிலிருந்தும், கோபியிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் கருப்பராயன் கோயிலில் ஆடிப் பெருவிழா

முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலம்

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்

முத்தையா சுவாமி கோயிலில் ஆடிப் படைப்புத் திருவிழா
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



