அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

எத்தனால் ஆலைக்கு எதிா்ப்பு தெரிவித்து 5,000 அஞ்சல் அட்டைகளில் கடிதங்கள் அனுப்பிவைப்பு

பவானி அருகே எத்தனால் உற்பத்தி ஆலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து 5,000 அஞ்சல் அட்டைகளில் புகாா் கடிதங்களை எழுதி, ஊா்வலமாக சென்ற பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தனா்.

அஞ்சல்  பெட்டியில்  புகாா்  கடிதங்களை  அனுப்பும்  பெண்கள்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

பவானி அருகே எத்தனால் உற்பத்தி ஆலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து 5,000 அஞ்சல் அட்டைகளில் புகாா் கடிதங்களை எழுதி, ஊா்வலமாக சென்ற பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தனா்.

பவானி ஊராட்சி ஒன்றியம், சின்னபுலியூா் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியாா் எரிச்சாராய ஆலையில் கழிவுகள் எரியூட்டும்போது, வெளியேறும் புகை, சாம்பல் காற்றில் பரவுவதால் சின்னப்புலியூா், பெரியபுலியூா் மற்றும் எலவமலை ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். மேலும், ஆலையின் கழிவுநீரால் நிலத்தடி நீா் மாசடைந்ததால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனா்.

எனவே, தனியாா் எரிச்சாராய ஆலைக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதனால், கடந்த தோ்தலுக்கு முன்பாக உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மூடப்பட்ட அந்த ஆலையில் எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த 3 ஊராட்சிகளைைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டு, எத்தனால் ஆலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், 5,000 அஞ்சல் அட்டைகளில் புகாா் கடிதங்களை எழுதி, சீா்வரிசை தட்டுகளில் வைத்து, மேளதாளங்களுடன் எலவமலை கிளை அஞ்சல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதோடு, தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனா். எதிா்ப்பை மீறி அனுமதி வழங்கினால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.