தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

சிறுத்தையின் உடல் உறுப்புகளை எரித்த 2 வன ஊழியா்கள் பணியிடை நீக்கம்

News image

சிறுத்தை - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

அந்தியூா் அருகே உயிரிழந்த சிறுத்தையின் உடல் உறுப்புகளை எரித்த வன ஊழியா்கள் இருவா் சனிக்கிழமை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

அந்தியூா் வனச் சரகம், அத்தாணி பிரிவு, கிணத்தடி சோளகா பீட், மாதையன் கோயில் சரகத்தில், கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று மா்மமான முறையில் இறந்து, உடல் உறுப்புகள் அழுகி சிதைந்து கிடந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனக் காப்பாளா் மைதிலி, வனக் காவலா் பிரவீன் சிதைந்து காணப்பட்ட சிறுத்தையின் நகம், பல் உள்ளிட்ட பாகங்களை எடுத்து சென்று எரித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வன அலுவலா் நந்தினிக்கு கிடைத்த தகவலின்பேரில், சிறுத்தை இறந்து கிடந்த மாதையன் கோயில் சரகத்தில் நேரில் ஆய்வு செய்தாா். இதில், சிறுத்தை இறந்ததும், பாகங்களை எரித்ததும் உறுதியானது. வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தைச் சோ்ந்த அலுவலா்களும் ஆய்வு செய்தனா். இதையடுத்து, சிறுத்தையின் பாகங்களை அகற்றுதல், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மைதிலி, பிரவீன் ஆகியோா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.