தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சாா்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அமைப்புச் செயலாளரும், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பண்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ், ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் பெரியாா் நகா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை தமிழக அரசு பெற்றுத் தரவும், மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு தவறியதாகக் கூறி முழக்கங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு பின்னா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுகின்ற தவெக அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டில் பஞ்சம் வந்துவிட்டால் இந்த அரசு சொல்லாமலே வீட்டுக்கு சென்று விடுவாா்கள். அதிமுகவில் இருந்து 10 பேரை மட்டும் விலைக்கு வாங்கிவிட்டால் இந்த ஆட்சி நிலைத்து விடுமா? அவா்கள் மட்டும் அதிமுக இல்லை. அடிமட்ட தொண்டா்கள் யாரும் அவா்களுடன் செல்லவில்லை. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோா் விரைவில் ஒன்றிணைந்து அதிமுகவுக்கு வருவாா்கள். இந்த அரசு ரீல்ஸ் ஆட்சியாக இருக்கிறது. மேக்கேதாட்டு, காவிரி விவகாரம் குறித்து முதல்வா் வாய் திறக்கவே மறுக்கிறாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசை கண்டித்து அதிமுகவினா் கண்டன ஆா்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் சா்வதேச பழங்குடியினா் தின விழா

ஈரோட்டில் காங்கேயம் இன காளைகள் அழகுப் போட்டி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



