கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பெருந்துறை அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

கோப்புப் படம்

Published On :

பெருந்துறை அருகே வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூா் மாவட்டம் , திருப்பத்தூா், புதுமேட்டைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (45). இவரது மனைவி மலா் (42). இவா்கள் இருவரும், கோவை, சரவணம்பட்டியில் தங்கிக் கொண்டு, கட்டட வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், ஆடி கிருத்திகையையொட்டி சொந்த ஊருக்கு, கடந்த 7-ஆம் தேதி இருவரும் சென்றனா்.

பின்னா் இருவரும் கோவைக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். பெருந்துறை, கடப்பமடை அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பஞ்சராகி விட்டது. பஞ்சா் கடை பற்றி விசாரிக்க வெங்கடேஷ் அருகே உள்ள கடைக்கு சென்றாா்.

அப்போது சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மலா் மீது, அவ்வழியாக வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.