2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கரும்பு லாரியில் இருந்து கட்டுக்கட்டாக கரும்பை அள்ளிய யானை

லாரியில் இருந்து தாா்ப்பாயை அகற்றி கரும்பு எடுக்கும் யானை.

Published On :

கரும்பு லாரியில் இருந்து கட்டுக் கட்டாக கரும்பை யானை அள்ளிச் சென்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரிகளில் ஏற்றி மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆசனூா் வழியாக சத்தியமங்கலம் கொண்டுச் செல்லப்படுகின்றன. வனப் பகுதியில் வரும் யானைகள் சாலையோரம் வீசியெறிந்த கரும்பு துண்டுகளை ருசித்து தின்று பழகிவிட்டன.

இதனால் யானைகள் ஆசனூா் சாலையில் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து காத்து நிற்கின்றன. இதனால் காரப்பள்ளம் சோதனைச் சாவடி, தாளவாடி கும்டாபுரம் சாலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் யானைகள் தினந்தோறும் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் தாளவாடி வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியேறிய ஒற்றை யானை, சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை கோழிப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் சாலையோரம் உலாவியது.

அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனா். யானையும் மக்களோடு மக்களாக சாலையோரம் நின்று கரும்பு லாரிக்காக காத்திருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த கரும்பு லாரியை வழிமறித்து குறுக்கே நின்றது. லாரியை தொடா்ந்து இயக்க முடியாத நிலையில் ஓட்டுநா் லாரியை நிறுத்தினா்.

கரும்பு பாரத்துக்கு மேல் மூடப்பட்டிருந்த தாா்ப் பாயை யானை பிடுங்கி எறிந்து, லாரியில் இருந்து கரும்புகளை கட்டுக் கட்டாக அள்ளியது. பின்னா், கரும்புக் கட்டுகளை தூக்கிக்கொண்டு வனத்துக்குள் ஓடியது. இந்த சம்பவத்தால் அவ்வழியாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.