2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே காரை தாக்க முயன்ற யானை

காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே காரை தாக்க முயன்ற யானையால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே காரை தாக்க முற்பட்ட யானை.

Published On :

காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே காரை தாக்க முயன்ற யானையால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா், திம்பம் மலைப் பகுதியில் உலவும் யானைகள் அவ்வழியே கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பை எடுத்து உண்பது வாடிக்கையாகி வருகிறது.

இதனால், அவ்வழியே வரும் வாகனங்களில் கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உள்ளனவா என யானைகள் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், ஆசனூரில் இருந்து கா்நாடகம் நோக்கி காா் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த யானை திடீரென காரை வழிமறித்து நின்றது. இதையடுத்து, அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் காரை பின்னோக்கி இயக்க முயன்றாா். இதனால், ஆத்திரமடைந்த யானை காரின் முன் பகுதி மீது காலை தூக்கிவைத்து தாக்க முயன்றது.

இதைப் பாா்த்த சக வாகன ஓட்டிகள் சப்தம் எழுப்பியும், ஹாரன் அடித்தும் யானையை விரட்டினா். இதையடுத்து, காரில் இருந்தவா்கள் பாதுகாப்பாக புறப்பட்டுச் சென்றனா்.

யானைகள் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுவதால், அந்தச் சாலையில் செல்ல வாகனங்கள் ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், அதிக அளவிலான கரும்பு பாரங்களை ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள், சோதனைச் சாவடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கரும்புகளை சாலையோரம் வீசி செல்கின்றனா்.

அவற்றை உண்டு பழக்கப்பட்ட யானைகள், அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளைத் தேடி வருகின்றன.

கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள், அளவுக்கு அதிகமான பாரம் இருந்தாலோ அல்லது விருப்பப்பட்டோ யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு அளிப்பதை தவிா்க்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.