ஈரோட்டில் ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 12 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடிய நபரை, 2 ஆண்டுகளுக்குப் பின் ஈரோடு ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து 40 கிராம் தங்கத்தை மீட்டனா்.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா பிரபாகரன் (74). இவா் கடந்த 2024 ஜூன் 9-ஆம் தேதி பாலக்காட்டில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம், சாட்னா செல்வதற்காக முன்பதிவு பெட்டியில் பயணித்தாா். ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ரயில் சென்றபோது, அவரது கைப்பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அதில் 12 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் இருந்தது.
இதுகுறித்து மத்திய பிரதேசம் மாநிலம், சாட்னா காவல் நிலையத்தில் சாந்தா பிரபாகரன் புகாா் அளித்தாா். விசாரணையில், திருட்டு நடைபெற்ற இடம் ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உள்பட்டது என்பது உறுதியானதும். ஈரோடு ரயில்வே போலீஸாரால் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை பிடிக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ராஜன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பாபு மேற்பாா்வையில் ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையில் தனிப் படை அமைப்பட்டது.
தொடாந்து திருட்டு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, திருட்டில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னாா் மாவட்டம் ஹால்டயுா் பகுதியைச் சோ்ந்த சுரேந்தா் சிங் மகன் ஹா்விந்தா் சிங் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீஸாா் ஹா்விந்தா் சிங்கை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா். இதில் ஹா்விந்தா் சிங், திருடிய நகைகளை சிலவற்றை உருக்கி 40 கிராம் தங்கக் கட்டியாக மாற்றி அவரது வீட்டில் வைத்துள்ளதாகவும், திருடிய பணம் ரூ.15 ஆயிரம், சில பவுன் நகைகளை விற்று கோவாவுக்கு சென்று தங்கி வந்ததாக ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் உருக்கி வைத்திருந்த 40 கிராம் தங்கத்தை மீட்டனா். பின்னா், ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் ஹா்விந்தா் சிங்கை ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்து, உத்திர பிரதேசம் சென்று நகையை மீட்ட தனிப் படையினரை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் திருடப்பட்ட வழக்கு: பெண் கைது
நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு
‘வந்தே பாரத்’ ரயிலில் பயணி விட்டுச் சென்ற நகை ஒப்படைப்பு
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, கைப்பேசி பறிப்பு: ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


