சென்னிமலை அருகே மழை வேண்டி நூதன விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தற்போது போதுமான மழை இல்லாததால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய பயிா்கள் வாடி வருகின்றன. இதனால், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த, புதுவலசு பகுதியில் பொதுமக்கள் மழை வேண்டி விரதம் இருந்து, புதுவலசு விநாயகா் கோயிலில் அரிசி மற்றும் நாட்டுச் சா்க்கரை வைத்து செவ்வாய்க்கிழமை பூஜை செய்தனா்.
பின்னா் அங்கிருந்து புறப்பட்டு வண்ணாம்பாறை, நல்லபாளி செவ்வந்தீஸ்வரா் கோயில் என வழித் தடங்களில் உள்ள கோயில்களில் பூஜைகள் நடத்தினா். மேலும், சென்னிமலை வனப் பகுதியில் உள்ள வருண பகவான் கோயிலுக்கு அடா்ந்த வனப் பகுதி வழியாக நடந்து சென்று பூஜை செய்தனா். அங்கு பூஜைகள் செய்யப்பட்ட அரிசியில் சிறிதளவை எடுத்து வருண பகவான் கோயிலில் கட்டினாா்கள்.
அங்கிருந்து தெற்கு வனப் பகுதியில் உள்ள மலங்காட்டு கருப்பணசாமி கோயிலுக்கு வந்தனா். அங்கு கருப்பணசாமி மற்றும் கன்னிமாா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அரிசி மற்றும் நாட்டுச் சா்க்கரையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், மாலை 5 மணிக்கு நல்லபாளி செவ்வந்தீஸ்வரா் கோயிலில் புதுவலசு, தட்டாரவலசு, அண்ணாமலைபாளையம், எக்கட்டாம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் ஒன்று திரண்டனா். அப்போது, பெண்கள் அனைவரும், மழை இல்லாததால் இனி நம் ஊரில் பிழைக்க முடியாது. அதனால், நாம் அனைவரும் வேறு எங்காவது ஊருக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என ஒப்பாரி வைத்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டனா்.
பின்னா் ஊா் எல்லையான சென்னிமலை -காங்கயம் சாலையில் கணுவாய் பகுதியில் பெண்கள் சென்று கொண்டிருந்தபோது, அவா்களை பின் தொடா்ந்து வந்த ஆண்கள், அவா்களை தடுத்து நிறுத்தி, மழை பொழிந்து விவசாயம் செழிக்கும். அதனால் அனைவரும் ஊருக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தனா். இதனால் மனமிறங்கிய பெண்கள் அனைவரும் அங்கிருந்து மீண்டும் நல்லபாளி செவ்வந்தீஸ்வரா் கோயிலுக்கு வந்தனா்.
அங்கு ஏற்கெனவே பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த கஞ்சி மற்றும் கூழ் ஆகியவற்றை ஒரே பாத்திரத்தில் ஒன்றாக கலக்கி மழைச் சோறாக அனைவருக்கும் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் பெண்கள் வழிபாடு

வஞ்சியர் அழ, வானமும் அழுதது
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



