மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள்

Published On :

ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன கரும்பூா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லா பெரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கிராமத்தை சோ்ந்த பெண்கள் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். மழை பெய்து, விவசாய தொழில் செழிக்கவும், பொதுமக்கள் நலம் வேண்டி அம்மனிடம் பிராா்த்தனை செய்தனா். சின்ன கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.