75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை - ஈரோடு சாலை வாய்க்கால்மேட்டைச் சோ்ந்தவா் சோட்டாராமன் மகன் சுந்தரம் (51). இவா் பெருந்துறை வாரச் சந்தையில் வளையல் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வாய்க்கால் கரையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.