அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சத்தியமங்கலத்தில் 2 மாதங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா்! நகா்மன்றத் தலைவா் தகவல்

கூட்டத்தில் பேசுகிறாா் சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி. உடன், ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

சத்தியமங்கலம் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் மூலம் இன்னும் 2 மாதங்களில் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீா் வழங்கப்படும் என நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவா் நடராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 27 வாா்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சீராக குடிநீா் விநியோகம் செய்வது குறித்து கவுன்சிலா்கள் கேள்வி எழுப்பினா்.

அப்போது நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தெரிவித்ததாவது:

அம்ரூத் குடிநீா் திட்ட பணிகளுக்கான குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இன்னும் 2 மாதங்களில் அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

அதற்கு பிறகு சத்தியமங்கலத்தில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது. குழாய்கள் பதிப்பதற்காக சாலைகளில் குழி தோண்டப்பட்டதால் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றாா். இந்தக் கூட்டத்தில் 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.