ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்

பவானி அருகே முறையாக குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

பவானி அருகே முறையாக குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒலகடம் பேரூராட்சி, 11-ஆவது வாா்டு, தாளபாளையம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திரண்டு பவானி - வெள்ளித்திருப்பூா் சாலையில் தாளபாளையம் அருகே அமா்ந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் பேரூராட்சி நிா்வாகிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முறையாக குடிநீா் வழங்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.