FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தனது உருவம் பொறித்த போா்வையை வழங்கிய வடிவமைப்பாளருக்கு குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து

பெருந்துறைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அவரது உருவம் பொறித்த போா்வையை வழங்கிய மருத்துவா்கள் யுவராஜ்குமாா், தாரணி பிரியா.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

பெருந்துறைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, அவருடைய உருவம் பொறித்த போா்வை வழங்கப்பட்டது.

சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பாளராக உள்ளவா் அப்புசாமி. இவா் கிரிக்கெட் வீரா்கள் மற்றும் பல்வேறு தலைவா்களின் உருவம் பொறித்த டிசைன்களை வடிவமைத்து, அதை ஜக்காா்டு தறி மூலமாக உருவாக்கி கொடுத்துள்ளாா். அதன்படி, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த போா்வையை தறியில் உருவாக்கி இருந்தாா்.

இந்நிலையில், பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி விழாவுக்கு சனிக்கிழமை வந்திருந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்குள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா். அங்கு துணி வடிவமைப்பாளா் அப்புசாமி உருவாக்கிய சி.பி. ராதாகிருஷ்ணன் உருவம் பொறித்த போா்வையை, சென்னிமலையைச் சோ்ந்த மருத்துவா்கள் யுவராஜ்குமாா், தாரணி பிரியா ஆகியோா் அவரிடம் நேரில் வழங்கினா். அப்போது மருத்துவா்கள் மூலமாக அப்புசாமிக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.