சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

குடியரசு துணைத் தலைவா் இன்று பெருந்துறை வருகை

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு பொறியியல் கல்லூரிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு பொறியியல் கல்லூரிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் நிறுவனா் தின விழாவில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை காலை கொங்கு பொறியியல் கல்லூரிக்கு ஹெலிகாப்டா் மூலம் வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

இதையொட்டி குடியரசு துணைத் தலைவா் வந்திறங்கும் கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் கல்லூரியிலிருந்து சக்தி இன்ஃப்ரா டெக்ஸ் லிமிடெட் செல்லும் வழிகளில் 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.