குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூருக்கு புதன்கிழமை (ஜூலை 22) வருகிறாா்.
2 நாள்கள் பயணமாக திருப்பூருக்கு வரும் அவா், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா்.
மேலும், பல்வேறு காரணங்களுக்காக டாலா் இல்லம், கணக்கம்பாளையம் பிரிவு, பி.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அவா் வருகை புரிவதால் அப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடியரசு துணைத் தலைவா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









